கோவையில் 23 தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் கைது

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 80
கோவையில் 23 தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் கைது

தமிழகத்தில் தபால்காரர் பணியிடங்களுக்கு வட மாநிலத்தவரைத் தேர்வு செய்ததைக் கண்டித்து கோவையில் தபால் அலுவலகத்தை 04.04.2017 செவ்வாய்க்கிழமையன்று முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 300 தபால்காரர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மோசடி செய்து வெற்றி பெற்று பணி நியமனம் செய்யப்படவுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்மொழி தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண் பெற்றது எப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதைக் கண்டித்து தபால் அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த 23 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் தபால்காரர் பணியிடங்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தி தபால்காரர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09