கோலாகாலமாக தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழா இன்று

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 28
கோலாகாலமாக தொடங்கும்  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழா இன்று

வழக்கமாக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடக்க விழா, முதல் ஆட்டம் நடக்கும் நகரில் மட்டும் கோலாகலமாக நடத்தப்படும். ஆனால் இந்த முறை வித்தியாசமாக தொடக்க விழா 8 நகரங்களில் தனித்தனியாக நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டத்திற்கு முன்பாக அங்கு தொடக்க விழா நடத்தப்படும்.

தொடக்க விழாவை அனைத்து அணிகளின் உள்ளூர் ரசிகர்களும் கண்டுகளிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இதன்படி ஒவ்வொரு அணி நிர்வாகமும் வெவ்வேறு பாலிவுட் நட்சத்திரங்களை அழைத்து தொடக்க விழாவை பிரமாதப்படுத்த திட்டமிட்டுள்ளன.

ஐதராபாத் நகரில் இன்று நடக்கும், பிரதான தொடக்க விழாவில் நடிகை எமிஜாக்சன் நடனம் ஆடி ரசிகர்களை குதூகலப்படுத்த உள்ளார். லேஷர் ஷோ, வாணவேடிக்கை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், 8 அணி கேப்டன்களின் உறுதிமொழி ஏற்பு ஆகியவையும் விழாவில் இடம் பெறுகிறது. இந்திய ஜாம்பவான்கள் சச்சின் தெண்டுல்கர், கங்குலி, டிராவிட், ஷேவாக், லட்சுமண் ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்படுகிறார்கள்.

தொடக்க விழா மாலை 6 மணிக்கு தொடங்கும். புனே, ராஜ்கோட், இந்தூர் பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களிலும் தொடக்க விழா நடக்க உள்ளன.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09