வரலாற்றில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகள்.

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 130

ஹட்டன் - டிக்கோயா வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளை அண்மையில் பெற்றெடுத்திருந்த சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இது தொடர்பான செய்திகளும் அண்மையில் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.

குறித்த குழந்தைகளை வளர்பதற்கு தேவையான உதவிகளை செய்ய தற்போது வர்த்தகர் ஒருவர் முன்வந்துள்ளார்.

மூன்று குழந்தைகளும் பாதுகாப்பாக வாழ்வதற்கு பொருத்தமான வகையில் அவர்களது இல்லத்தை மறுசீரமைத்து கொடுக்கவும் வர்த்தகர் உடன்பட்டுள்ளார்.

மஸ்கெலியா சாமிமலை ஸ்டோக்ஹோம் தோட்டத்தில் வசித்து வரும் புஷ்பலதா என்ற பெண்னே இந்த மூன்று குழந்தைகளின் தாயாவார்.

இவருக்கு இது நான்காவது பிரசவம் எனவும் ஏற்கனவே அவருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இவர் குழந்தையை வளர்க்க பொருளாதார சிக்கல்கள் உள்ளதாக அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் வர்த்தகர் உதவி செய்ய முன்வந்துள்ளதுடன் குழந்தைகளுக்கு தேவையான பால் மா, உடைகளுடன், அந்த குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மேலும் பல பரிசு பொருட்களையும் அந்த வர்த்தகர் வழங்கியுள்ளார்.

களனி – வரகாகொட பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகரான ரொஹான் அபயவர்தன என்ற நபரே தற்போது அவருக்கு உதவி செய்வதற்காக முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09