​பிரதமர் ரணில் விஜயத்தை எதிர்த்து தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர் அமைப்புக்கள் போராட்டம் .

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 46
​பிரதமர் ரணில் விஜயத்தை எதிர்த்து தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர் அமைப்புக்கள் போராட்டம் .

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யும் அதேவேளை, அதனை எதிர்ப்பதற்கு தமிழ் மற்றும் சிங்கள புலம்பெயர் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் செல்கின்றார்.

இந்த விஜயத்தை எதிர்த்து தமிழ் மற்றும் சிங்கள அமைப்புக்கள் இரண்டு போராட்டம் நடத்தவுள்ளன.

தமிழ் மக்களின் தேவைகளை இந்த அரசாங்கம் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாகக் கூறி புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்பு ஒன்று எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தி சிங்கள புலம்பெயர் சமூகமொன்றும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் தேவைக்கு அமைய இந்த சிங்கள புலம்பெயர் அமைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.

எவ்வாறெனினும், இலங்கையின் அரச தலைவர் ஒருவர் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்யும் போது இவ்வாறு போராட்டம் நடத்துவது வெட்கப்பட வேண்டியதொன்று என அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் ஏனைய சிங்கள அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09