வடகொரியாவின் எதிர்ப்பையும் சம்பாதித்த அமெரிக்க ஜனாதிபதி

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 81
வடகொரியாவின் எதிர்ப்பையும் சம்பாதித்த அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளில் பலவற்றை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து நிர்வாக ஆணைகளை பிறப்பித்து பலரது எதிர்ப்புக்களை சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக வடகொரியா, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அனுப்பி சோதனை நடத்தியது, பலநாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

குறிப்பாக ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளை அதிகமாக திரும்பி பார்க்க வைத்துள்ளது.

வடகொரியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை ஜப்பான் கண்டித்து தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்துள்ளது. இதுபோலவே, கடந்த ஆண்டிலும் பல ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை செய்தது.

அப்போதிருந்தே வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை செய்து வருகிறது. கொரியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு பியாங்யானில் உள்ள பாங்யான் விமான தளத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவப்பட்டது. இந்த ஏவுகணைச் சோதனை கடந்த ஞாயிறு காலை கொரிய நேரப்படி 7.55-க்கு ஏவப்பட்டது.

இதனை குறிக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், வட கொரிய ராணுவம் அமெரிக்காவினை அடைந்து அணு ஆயுதப்போர் புரியும் வல்லமை கொண்ட அதிக தூரம் பயணிக்கும் ஏவுகனை சோதிக்கும் திறனை நெருங்கி விட்டோம் என எச்சரித்திருந்தார்.

ஆனால் அப்போது டுவீட் செய்த டிரம்ப், 'இல்லை, அவ்வாறு நடைபெறாது' என சொல்லியிருந்தார். ஆனால் வடகொரியா தாம் குறிப்பிட்டுள்ளது போன்றே அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா வந்த ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவிடம், ஜப்பானுக்கு அமெரிக்கா 100 சதவிகிதம் துணையாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை சோதனை குறித்து கருத்து தெரிவித்த தென்கொரியா, ஏவுகணை ஜப்பான் கடல்பகுதியில் கிழக்கு பக்கமாக சுமார் 500 கி.மீ வரைக்கும் பயணம் செய்தது என தெரிவித்துள்ளது. ஆனால் 'இதனை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியாது' என ஜப்பான் பிரதமர் அபே மறுத்துள்ளார்.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09