கிராம மாணவர்களின் கனவு கலைவதை தடுக்கும் படி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் .

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 16
கிராம மாணவர்களின் கனவு கலைவதை தடுக்கும் படி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் .

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு திடீரென அகில இந்திய அளவில் “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு” அறிமுகப்படுத்தப்படுவதால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படவிருக்கும் மன உளைச்சல் மற்றும் துயரங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

மே மாதம் 7-ந் தேதி நடைபெறவிருக்கும் ‘நீட்’ தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 1-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் எதிர்காலமான மாணவர்களின் நலனை பாதுகாக்க இந்த விவகாரத்தில் நீங்கள் அவசரமாக தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவ முதுகலை படிப்புகளுக்கான ஒற்றை “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு” டாக்டராக வேண்டும் லட்சியத்துடன் இருக்கும் கிராமப்புற மாணவர்களின் நலனை நிச்சயம் பாதிக்கும். “அறிவார்ந்த டாக்டர்கள்” தேவை என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம் சிறந்த பொதுச் சுகாதாரத்திற்காகவும், மருத்துவ சேவைகளை கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லவும் “எளிய மருத்துவர்கள்” தேவை என்பதும் மிக முக்கியமானது.

அதனால்தான் கிராமப்புற மாணவர்களுக்கும் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை மாணவர்களுக்கும் “நீட்” தேர்வு சாதகமாக இருக்காது என்று கூற விரும்புகிறேன். அதையும் மீறி, அகில இந்திய அளவில் “நீட்” தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டால், டாக்டராக வேண்டும் என்ற கிராமப்புற மாணவர்களின் எதிர்கால கனவு சிதைக்கப்படுவதோடு, அவர்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கும் ஆளாவார்கள். பொதுமக்கள் மற்றும் கிராமப்புறங்களின் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அர்ப்பணிப்பு உணர்வுள்ள டாக்டர்கள் தேவை என்ற பார்வை உங்களுக்கும் இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

அதுமட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெவ்வேறு கல்வி முறை மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

தமிழகத்தில் 2007-ம் ஆண்டு, தொழிற்கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்த கட்சியின் செயல் தலைவர் என்ற முறையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான “நீட்” தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, 1-2-2017 அன்று மாநில அரசால் கொண்டுவரப்பட்ட “நீட்” தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதா தி.மு.க.வின் முழு ஆதரவுடன் தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்வு தேதி வேகமாக நெருங்கி வரும் இந்த முக்கியமான தருணத்தில், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் அரசியல் சாசன நெருக்கடியால் மாநில நிர்வாகம் ஸ்தம்பித்துள்ள சூழ்நிலையில், “நீட்” தேர்வுக்கு விலக்களித்து மாநில அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவின் எதிர்காலம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

எனவே, “நீட்” தேர்வு தொடர்பான தமிழக சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத்தர தங்களுடைய ஒத்துழைப்பை நான் கோருகிறேன். மேலும், கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு உடனடியாக மாற்றி, மத்திய அரசு கூறி வரும் “கூட்டாட்சி தத்துவத்தை” நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09