பிரான்சில் உள்ள பிரபல ஈஃபிள் கோபுரத்தை சுற்றிலும் கண்ணாடியால் ஆன தடுப்புச்சுவர்

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 42
பிரான்சில் உள்ள பிரபல ஈஃபிள் கோபுரத்தை சுற்றிலும் கண்ணாடியால் ஆன தடுப்புச்சுவர்

பிரான்சில் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தை சுற்றி குண்டு துளைக்காத கண்ணாடியால் ஆன சுற்றுச்சுவர் எழுப்ப பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

சுமார் 2.5 மீட்டர் உயரத்தில் அமையவுள்ள இந்த கண்ணாடி சுவர் அமைக்க 300 மில்லியன் யூரோ செலவு கணக்கிடப்பட்டுள்ளது. 128 வருட பழைமையான ஈஃபிள் டவரை புதுப்பிக்கும் வகையில் இந்த கண்ணாடி சுவர் மாதிரியை அமைக்க உள்ளதாக ஜனவரியில் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதற்கான பணிகள் தற்போது தொடங்க உள்ளது.

ஈஃபிள் கோபுரத்தை கண்டுகளிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் எந்தபகுதியில் இருந்து வேண்டுமானாலும் உள்ளே நுழைய முடியும். இந்த கண்ணாடியால் ஆன மதிலை எழுப்புவதன் மூலம் குறிப்பிட்ட வழியாக மட்டுமே சுற்றுலாப் பயணிகள் உள்ளே வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சுவர் எழுப்புவதன் மூலம் நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும். மேலும் ஈஃபிள் கோபுரம் பகுதியில் பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09