யானைகளுக்கு கம்பளி உருவாக்கும் கிராம மக்கள்

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 41
யானைகளுக்கு கம்பளி உருவாக்கும் கிராம மக்கள்

யானைகளுக்கு உடை தயாரிப்பது சாத்தியமா? பொதுவாக மக்களை கவர்வதற்காக மட்டுமே யானைகளுக்கு சினிமா மற்றும் சர்கஸில் உடை தயாரிக்கப்பட்டு அணிவிக்கப்படும்.

இந்நிலையில், உறையும் குளிரிலிருந்து யானைகளை பாதுகாக்க வண்ணமயமான கம்பளிகளை கிராம மக்கள் தயாரிக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உத்திரபிரதேச மாநிலம், மதுராவின் வடக்கு நகரில் உள்ள வனவிலங்கு யானை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மையத்தில் உள்ள ஊழியர், “ இரவு நேரங்களில் குளிர் பூஜ்யம் டிகிரியை நெருங்குவதால் யானைகள் பாதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து, கிராமத்தின் அருகே இருக்கும் பெண் ஒருவர், யானைகளுக்கு வண்ணமயமான ஆடைகளை தயாரிக்க தொடங்கினார்.

இந்த பராமரிப்பு மையம் நீண்ட நாட்களாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடித்து துன்புறுத்தபட்ட யானைகளை மீட்டு வருகிறது.

கிராம மக்கள் இணைந்து யானைகளின் கால்கள், முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றை மறைப்பதற்கு வண்ணமயமான கம்பளிகளை பின்னி வடிவமைத்து, அவற்றை யானைக்கு அணிவித்து, ஒரு நிகழ்ச்சியாகவே கொண்டாடுகின்றனர். யானைகள் அவற்றை அணிந்து நடப்பது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

யானை பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் கார்த்திக் சத்யநாரயணன்,” ஏற்கனவே யானைகள் துபுறுத்தப்பட்டு, பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் குளிரில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த தீவிர குளிர் காலத்தில் , யானைகள் வலிமையிழக்கின்றன. எனவே, நிமோனியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்புள்ளது. மேலும், குளிர்காலத்தில் யானைகளுக்கு கீழ்வாதம் அதிகரிப்பதை சமாளிப்பதே ஒரு பொதுவான பிரச்னையாக உள்ளது” என தெரிவித்துள்ளனர்.

கடத்தல் கும்பலால், சர்கஸ் மற்றும் தெருக்களில் பிச்சை எடுக்க பயன்படுத்தபட்டு வந்த யானைகள் உட்பட சுமார் 20 யானைகள் தற்போது இந்த மையத்தில் பராமரிக்கப்படுகிறது. இதுபோல் சட்டவிரோதமாக யானைகள் பயன்படுத்தப்பட்டு, அழிக்கப்படுகிறது.

உலகில் சுமார் 24 வகையான யானைகள் இருந்தன. அதில் 22 வகைகள் அழிந்து விட்டன. இப்போது, யானைகளில் இருவகைகள் மட்டுமே உள்ளது. ஒன்று ஆப்ரிக்க யானை, மற்றொன்று இந்திய (ஆசிய) யானை மட்டுமே. ஆனால், சமீப காலமாக யானைகள் ரயில் அடிப்பட்டு இறப்பது அதிகரித்து வருகிறது. மேலும், அவற்றின் தந்தங்களுக்காக அவை கொல்லப்படும் சம்பவமும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09