நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழர் மரபு விழா

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 49
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழர் மரபு விழா

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை(29-01-2017), தமிழர் மரபு திருநாள் விழாவை 200 க்கு மேற்பட்ட பொது மக்களுடன் பெரிய சிவன் கோயில் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக கொண்டாடியது.

இந்த விழாவை ஒருங்கிணைத்த, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரபு உரிமைக்கான மையத்தின் தலைவரும், மேல் சபை உறுப்பினர்களில் ஒருவருமான திரு இராசரெத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் தமக்கே உரித்தான நேர்த்தியான திட்டமிடல் பாணியில், மிகக் குறுகிய காலத்தில், மிக சிறப்பாக இந்த விழாவை ஒருங்கிணைத்திருந்தார்.

மேல் சபை உறுப்பினர்களில் ஒருவரான திருமதி உஷா சிறீஸ்கந்தராஜா வந்தோரை இன் முகத்துடன் வரவேற்கும் தமிழ் பண்பாட்டுக்கு இணங்க புன்னகை மின்னும் முகத்துடன் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்தார்.

தமிழர் மரபு அடையாளங்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தின் ஒரு புறம் தமிழர் மரபு சார்ந்த பொருள் காட்சியுடன் அரிய சில நூல்களும் மண்டபத்திற்கு தனி சிறப்பை உருவாகியது என்றால் அந்த சிறப்புக்கே சிறப்புச் சேர்த்தது, அறுபது வருடங்களுக்கு மேலான அரசியல் அறிவுடன் நடமாடும் நூலகம் ஆக 85 வயது ஈழவேந்தன் ஐயாவின் உற்சாகமான பங்களிப்பு.

விழாவின் முற் பகுதியின் தொகுப்பாளர் செல்வி பிரியங்கா, பாராட்டப்பட வேண்டியவர் மட்டுமல்ல தமிழுக்கு பெருமை சேர்க்கக் கூடிய திறமைசாலியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் உலகம் நன்கு அறிந்த தொகுப்பாளர் திருமதி கோதை அமுதன், விழாவின் பிற்பகுதியை தொகுத்து வழங்கியபோது, மிக சிறப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளை சபைக்கு எடுத்து இயம்பினார்.

வழமை போல் அக வணக்கம்,தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்று நடனத்தை தொடர்ந்து திரு இராசரெத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் வரவேற்பு உரை இடம்பெற்றது.

அத்துடன் இந்த விழாவில் திரு தந்தை சந்திரகாந்தன் சிறப்பு விருந்தினராக சமூகம் அளித்து உரை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நலம் விரும்பிகள், தொண்டர்கள், அங்கத்தவர்கள், மந்திரிகள், மேல் சபையினர் என பல தரப்பினரும் இணைந்து, இந்த விழாவை சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கும் போது, எங்கோ ஒரு சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்து விட்டோமோ என திகைக்க வைத்தனர் எம் சின்னம் சிறு சிட்டுக்கள்.

இந்த கொஞ்சும் தமிழ் பேசி வந்த பைங்கிளிகள், தமிழ் கலைகளின் பல்வேறு பரிமாணங்களை நம் கண் முன்னே விரிய விட்டு நம் கண்களுக்கு காதுகளுக்கும் விருந்து அளித்த போதும், அவர்கள் தொடர்ந்து ஒரு செய்தியை கூறினார்கள். அதாவது, “அஞ்ச வேண்டாம், எங்கள் அன்னை தமிழை நாங்கள் என்றென்றும் கன்னி தமிழாக காத்திடுவோம்.”

தமிழ் பண்பாட்டின் ஒரு முக்கிய அங்கம் விருநதோம்பல். இந்த விழாவிலும் அறுசுவை சிற்றுண்டியும் தேனீரும் விழாவிற்கு சிறப்பு சேர்த்தது குறித்த நேரத்தில் தொடங்கி குறித்த நேரத்தில் நிறைவேறிய இந்த நேர ஒழுங்கு நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். திரு யோ அன்ரனி அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09