கனடாவில் 2 மில்லியன் டொலர் அன்பளிப்பு செய்த ஈழ தமிழ் தொழிலதிபர்

ஆசிரியர் - Jaffna Editor, பார்வைகள் - 125
கனடாவில்  2 மில்லியன் டொலர்  அன்பளிப்பு செய்த ஈழ தமிழ் தொழிலதிபர்

கனடாவில் உள்ள ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட கற்கை நெறிகளை ஊக்குவிப்பதற்காக 2 மில்லியன் டொலர் ரொக்க நிதி அன்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும், பிரபல தொழிலதிபரும், வட மாகாணத்தை சொந்த இடமாக கொண்ட கனேடிய தமிழருமான கலாநிதி ரவி குகதாசன் இவ்வன்பளிப்பை மேற்கொண்டு உள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தின் 51 வருட வரலாற்றில் தனிப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து கிடைக்க பெற்று உள்ள மிக பெரிய அன்பளிப்பு இதுவே ஆகும்.
இந்நிதியில் 1.25 மில்லியன் டொலர் இவரின் இரு பிள்ளைகளின் பெயரிலான 10 வருட கால புலமைப் பரிசில் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இவரின் அன்பளிப்பு நிதியை பயன்படுத்தி தமிழ் பாட கற்கை நெறிகளை விஸ்தரிக்க முடியும் என்றும் புலமை பரிசில்கள், பட்டய கற்கைகள், பட்ட பின் கற்கைகள் போன்றவற்றை வழங்குவதோடு ஈழ தமிழரின் கலை, கலாசாரம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை கனேடியர்களுக்கும், ஏனையோருக்கும் எடுத்து காட்டுகின்ற செயல் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும் இப்பல்கலைக்கழகம் பூரண நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.
குகதாசனின் குடும்பம் 1974 ஆம் ஆண்டு வடக்கை விட்டு வெளியேறி பிரித்தானியா சென்றது. பின்பு கனடாவில் குடியேறியது. வட ஸ்கார்பரோவில் வசித்தனர். இவர் 1978 ஆம் ஆண்டு ஸ்கார்பரோ கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இப்பாடசாலையில் இவருடன் சேர்த்து இரு தமிழ் மாணவர்களே பயின்றனர். இவர் ரோரன்ரோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் 1982 ஆம் ஆண்டு பி. எஸ். ஸி பட்டம் பெற்றார். 1986 இல் ரோரன்ரோ பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றார்.
இவரை முன்மாதிரியாக கொண்டு இன்னும் ஏராளமான தமிழர்கள் இப்பல்கலைக்கழகத்தில் தமிழ் பாட கற்கை நெறியை விஸ்தரிக்க இயலுமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்று குகதாசன் பகிரங்கமாக கேட்டு உள்ளார்.

நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் Share

மரண அறிவித்தல்

பெயர் test
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-03-27

மரண அறிவித்தல்

பெயர் மரிய அன்ரன்
பிறந்த இடம் யாழ்
வாழ்ந்த இடம் பிரான்ஸ்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-02-03

மரண அறிவித்தல்

பெயர் விமலசோதி
பிறந்த இடம் யாழ்.
வாழ்ந்த இடம் டென்மார்க்
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2017-01-13

மரண அறிவித்தல்

பெயர் கந்தையா
பிறந்த இடம் யாழ். வட்டுக்கோட்டை
வாழ்ந்த இடம் கனடா
முழுவிபரம்பிரசுரித்த திகதி - 2016-10-09